
நாட்டில் டெங்கு தொற்றுத் தீவிரமடைந்துள்ள நிலையில், தெல்லிப்பளை, நல்லூர், உடுவில் மற்றும் முந்தல் உட்பட 17 பிரதேசங்கள் தொற்று பிரதேசங்களாக புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதத்தில் 2,962 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவை, அத்தனகலை, திவுலப்பிட்டிய, மிரீகம, அம்பலன்கொடை, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில் மற்றும் முந்தல் உள்ளிடட 17 பிரதேசங்களில் டெங்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தொற்று தீவிரமாக்குவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன என்று எச்சரிக்கப்படுகிறன்றது.
எனவே மக்கள் டெங்குத்தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





