
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள, வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து புத்தர் சிலையை நேற்று முன்தினம் பிரதிஷடை செய்தனர்.
குறித்த பகுதியில் தமிழ் மக்களே செறிவாக வாழ்ந்து வருகின்றனர். பிரதேச செயலகத்திலும் உதவி பிரதேச செயலர் உட்பட அதிகளவிலான உத்தியோகத்தர்கள் தமிழ், முஸ்லிம்களாக உள்ளனர்.
இந்த நிலையில் வடக்கில் இடம்பெற்று வரும் அரசின் பௌத்த மயமாக்கல் திட்டங்களுக்கு, பிரதேச செயலகங்களும் உடந்தையாகச் செயற்படுகின்றன. என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்.





