போரை நிறுத்துங்கள் புதின் : வைரமுத்து

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையில் நடைபெற்று வரும் போரை நிறைவுக்கு கொண்டுவருமான கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ருவிட்டர் பதிவில்,

மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்

கரும்புகை
வான் விழுங்கும்

பகலை
இருள் குடிக்கும், கடல்கள் தீப்பிடிக்கும்

குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்

ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்

போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார்.

Leave a Reply