இந்திய எல்லைக்குள் பிரவேசித்த 5 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான வைய்ரா ரோந்து கப்பல் தூத்துக்குடிக்கு தெற்கே, இலங்கை மீன்பிடி படகில் பயணித்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இந்திய கரையோர காவல் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

இதன்போது இலங்கை மீனவர்கள் பயணித்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி மீனவர்கள், படகுடன் நாளை அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கடலோர பாதுகாப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a Reply