ஊர்காவற்றுறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேற்கு வீதியில் ஒருவர் நேற்றைய தினம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஊர்காவற்துறையைச் சேர்ந்த 55 வயதான குறித்த சந்தேக நபர் 2,000 மில்லிக்கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தவேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply