திருமலையில் விடுதலைப்புலிகள் பாவித்த புத்தகங்கள் மீட்பு!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்திற்கிடமான புத்தகங்கள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இப்புத்தகங்கள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

காணி உரிமையாளர் நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இவ் புத்தகங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, காணி உரிமையாளர் ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இப்புத்தகங்கள் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply