தேசிய அரசை அமைப்பதற்கு வாய்ப்பில்லையென அரச உயர்மட்ட தலைவர்கள் தெரிவிப்பு

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் தேசிய அரசொன்றை அமைப்பது குறித்து ஆளுங்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நீண்ட மந்திரலோசனைகளை நடத்தினாலும் அதற்கான வாய்ப்பில்லையென உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசொன்றை அமைத்து அதன் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை நியமிப்பதென்றும் இதர தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளை அதில் இணைப்பதென்றும் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் தேசிய அரசொன்றுக்கு செல்வது தொடர்பில் அரசுக்குள் எதிப்புகள் எழுந்துள்ளன.

தேசிய அரசொன்றை அமைத்து பிரதமர் பதவியில் ரணிலை நியமித்தால் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விடயம் தொடர்பில் மக்களின் அதிருப்தியை எதிர்நோக்க நேரிடுமென ஆளுங்கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் அரச உயர்மட்ட தலைவர்களை எச்சரித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அறவே இல்லையென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இதில் உடன்பாடில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply