சபாநாயகரை சந்தித்தார் சீனத் தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்தார்.

இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொரோனா சவால்மிக்க சூழலில் சீன அரசு இலங்கைக்கு வழங்கும் பல்வேறு உதவிகளுக்கும் சபாநாயகர் அந்நாட்டு அரசுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

Leave a Reply