மலையக மக்கள் பலருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை – அதிர்ச்சித் தகவலை கூறிய இராதாகிருஷ்ணன் எம்.பி

மலையக மக்கள் பலர் தமது பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கு அல்லல் படுகின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றும் இதே நிலைமை நீடிக்கிறது.அதே போல தான் அடையாள அட்டை பெறும் விடயமும் குறைவாக உள்ளது.

இந்த வேலையை அரச அதிபர் ஊடாகத்தான் மேற்கொள்ள வேண்டும்.அதற்கு பிரதேச செயலகங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்கள் நிறுவுவதற்கு நாடாளுமன்றில்,தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இன்று வரை இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.அதற்கு பதிலாக உப அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆனால் காலி மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட 3 பிரதேச செயலகங்கள் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடயத்திலும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply