பொலிஸ் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வு

மட்டு. கரடியனாறில் ஒருவர் கைது 48 கீப் மணலும் மீட்பு (கனகராசா சரவணன்)மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு பகுதியில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயரை கூறி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் இவரை கைது செய்ததுடன் அகழ்ந்த மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரு களஞ்சிய நிலையங்களில் இருந்து 48 கீப்  மணலை மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஓப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.குறித்த பகுதியிலுள்ள ஆற்றில் மணல் அகழ்வதற்கு சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,சிலர்  அதனை மீறி அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி இரவில் அந்த பகுதியிலுள்ள நிலத்தை கனரகவாகனம் கொண்டு தோண்டி மணலை அகழ்ந்து எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பகுதியில் களஞ்சியப்படுத்தி வந்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த மணல் களஞ்சியசாலைகளை முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்தனர்.

Leave a Reply