தேங்காய் எண்ணெய்க்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற்ற திட்டம் 

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் தேங்காய் எண்ணெய்க்கு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்க சில பல்தேசிய நிறுவனங்கள் தயாராகி வருவதாக உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தேங்காய் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply