மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி : சூப்பர் அப்டேட் தந்த ஜி.வி!

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் செல்ஃபீ திரைப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் இரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், இரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள். இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரலாம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறன’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது  பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளைய தினம் (மார்ச் 10) வெளியாகவுள்ளது.

இதனையடுத்து  பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply