
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை ஏ-9 வீதியில் அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்- பஸ் விபத்தில் இளைஞர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது பஸ்ஸூக்கு பின்னால் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து பஸ்ஸூடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





