
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் 367 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்தது இலங்கை அரசாங்கம்.
அத்தியாவசியமற்ற பொருட்கள் என அவை வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அதிவிசேட வர்த்தமானியில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை, அண்மையில் பதவி விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விரைவில் 300 பொருட்களுக்கு தடை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





