மருந்துப் பொருட்களின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படும்! சன்ன ஜயசுமண

டொலரின் விற்பனை விலை அதிகரிப்புக்கு ஏற்ப மருந்துப் பொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்தியாவுடன் இணைந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் இதற்கான கடன் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மருந்து கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பில் அறிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தேவைக்கு ஏற்ப மருந்து கையிருப்பிற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

பராசிட்டமோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், பரசிட்டமோல் மீதான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருந்துகளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரச மருந்து கூட்டுத்தாபனம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மருந்துகளின் விலை அதிகரித்து செயற்கையான தட்டுப்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையில் தனியார் மருந்தாளர்கள் மருந்துகளை வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply