சவால்களுக்கு மத்தியில் சாதிக்கும் யாழ்ப்பாண பெண் ஆட்டோ சாரதிகள்

ஆண்களும் மனிதர்கள்,பெண்களும் மனிதர்கள் அந்த வகையில்,குழப்பம் இல்லாமல், யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் தொழிலை திருப்தி கரமாக செய்து வருகின்றோம் என யாழில் ஆட்டோ ஓட்டும் பெண் தொழில் முயற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எமது வீட்டு பொருளாதாரம் எமக்கு தான் தெரியும். அடுத்தவர்கள் பல கதைகளை கூறுவார்கள்.அதை கேட்க முடியாது.

எம்முடன் ஆட்டோ ஓட்டிய சக பெண் கூட இந்தகைய கதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டினால் திருமணத்துக்கு மாப்பிள்ளை கிடைக்காது என்று.

மேலும், வீட்டு பின்னணி எல்லாவற்றுக்கும் காரணம்.எங்கள் பாதுகாப்பு எங்களிடம் தான் உள்ளது.

என்னோடு சுமார் 12 பேர் வரை ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வந்தனர்,காலப்போக்கில் இப்போது மூன்று பேர் அளவிலே இந்த தொழிலைச் செய்கின்றோம்.

நான் சொந்தக் காலில் நிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இதை செய்து வருகின்றேன்.

சுயமாக நாம் உழைத்தால் மட்டுமே வாழ முடியும்.சமூகம் பல கதையை சொல்லும் ஆனால் சாப்பாடு தராது.

எனக்கு நான்கு பிள்ளைகள் அவர்களுக்கும் எனது தைரியத்தை கொடுத்து வளர்த்து வருகின்றேன் என்றார்.

Leave a Reply