
இலங்கையை உலுக்கிய 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாம் ஆண்டு நிறைவடையும் இந்த துயரமான நாளில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், தொடர்ச்சியாக கூட்டுப் பழியின் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் நீதி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த கோரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அனைவருடனும் ஒவ்வொரு இலங்கையரும் தமது மனமார்ந்த அனுதாபங்களையும், அசைக்க முடியாத ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்

