வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று  நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களால் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், பாப்பரசர் நினைவாக மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்  கத்தோலிக்க மதகுருமார், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்ர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply