அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி!

நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியுடன் அவரது மனைவி ஒலேனா செலன்ஸ்கா (Oleksandra Zelenska) மற்றும் அந்நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரும் பாப்பரசர் பிரான்சிஸ்ஸின்  இறுதி நல்லடக்க ஆராதனைகளில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில்  பிரான்சிஸ் திருத்தந்தையின்  நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி  வொலோடிமர் செலன்ஸ்கியும்  இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply