
கலாநிதி எரின் வால்ஸ் (Erin Walsh) என்பவர் எழுதிய வசீகரமான வடிவமைப்பு மற்றும் வளர்ந்து வரும் மூளைகள் ( Persuasive Design and Growing Brains) கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றி பேசுகின்றது. அவரது கருத்துக்களின் படி, பொதுவாக ஊடகங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் ஊடகங்கள் நன்மைபயப்பதும் தீமை பயப்பதும் அவ்வூடகங்களை பயன்படுத்தும் முறையிலேயே உள்ளது எனும் தத்துவத்தின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன.