உக்கிர மோதலுக்கு மத்தியிலும் உக்ரைனில் தங்கியிருக்க 27 இலங்கையர்கள் விருப்பம்

உக்ரைனில் வசித்துவரும் 27 இலங்கையர்கள், அந்நாட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பெலாரஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத கால கட்டணமற்ற விடுமுறை வழங்க பெலாரஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply