போர்த்துக்கல், ஸ்பெயினை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு!

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்களில் திங்கட்கிழமை (28) ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத மின் தடையால் நகரங்கள் இருளில் மூழ்கின.

அதேநேரம், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் சிக்கித் தவித்தனர், மேலும் மில்லியன் கணக்கான மக்கள் தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு இல்லாமல், ஐபீரிய தீபகற்பம் முழுவதும் ஏ.டி.எம்.இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற முடியாமல் தவித்தனர்.

ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தேசிய அவசரநிலையை அறிவித்தது.

இரு நாடுகளின் அரசாங்கங்களும் அவசர அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டியதால், நாடு முழுவதும் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க 30,000 பொலிஸாரை பணி நிறுத்தியது.

People buy food at a supermarket, during a major power outage in Barcelona, Spain, Monday, April 28, 2025. (AP Photo/Emilio Morenatti)

பின்னர் திங்கள்கிழமை பிற்பகுதியில் ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழமைக்கு திரும்பத் தொடங்கியது.

திடீர் மின்சார செயலிழப்புக்கான உறுதியான காரணம் இன்னும் கூறப்படவில்லை.

எனினும், போர்ச்சுகல் இந்தப் பிரச்சினை ஸ்பெயினில் தோன்றியதாகக் கூறியது.

எவ்வாறெனினும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்குள் ஸ்பெயின் அதன் மின்சாரத்தில் 92% க்கும் அதிகமான இணைப்பை மீட்டெடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் 48 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முழு நாட்டிலும் நாள் இறுதிக்குள் மீண்டும் விளக்குகள் எரியும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

மார்ச் 20 அன்று இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஆறு வாரங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது கடுமையான ஐரோப்பிய மின் தடை இதுவாகும்.

இதனிடையே, போர்ச்சுகல் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஒரு அறிக்கையில், சைபர் தாக்குதலால் மின் தடை ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply