
சகல இலத்திரனியல் கருவிகளும் அவற்றுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிற சமூக வலைப்பின்னல் தளங்களும் கவன ஈர்ப்புப் பொருளாதாரம் என்கிற ஒரு விடயத்தை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இது நாம் தொழில்நுட்பத்தில் செலவிடுகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஏதோ ஒரு சர்வதேச நிறுவனம் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. முகப்புத்தகம், யூடியுப் (Youtube) அல்லது வேறொரு சமுக ஊடகத் தளத்தில் தென்படுகின்ற வீடியோ உள்ளடக்கத்தை நாம் பார்வையிடுகின்ற பொழுது அதற்காக நாம் கட்டணம் செலுத்துவதில்லை.

