
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இனவாதத்தை வென்ற 9 ‘ஏ’– ஷாபியின் மகள் ஸைனப் சொல்லும் செய்தி என்ன?’ எனும் தலைப்பில் விடிவெள்ளி ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. அக்கட்டுரையின் முதல் பந்தி ‘2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை -பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியானது. பரீட்சை பெறுபேறுகள் வெளியானது முதல் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அது தொடர்பில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

