நிதி அமைச்சர் பிச்சை எடுக்கச் சென்று விட்டாரா? – சபையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சல்

சபையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கருத்து தெரிவிக்கையில்:

நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துள்ளது. ஆனால் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கிறார்கள். இது தவிர நிதி தொடர்பான விடயங்கள், பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தாமல், அமைச்சர்களின் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, ஒப்பந்தங்கள் கையாளப்படுகிறது.

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நிதி அமைச்சர் சபைக்கு வருவது இல்லை. அவர் தான் நாட்டின் விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரை சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்கு கட்டளை அனுப்புங்கள்.- என்றனர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன,

உறுப்பினர் ஒருவரை சபைக்கு வாருங்கள் என்று கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ஒரு உறுப்பினர் சபைக்கு வரவில்லை என்றால் மட்டுமே நான் கட்டளை அனுப்ப முடியும்.- என்றார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி எம்.பிக்கள்,

லக்ஸ்மன் கிரியெல்ல துக்கத்தில் இருக்கிறார். அவரை தொலைக்காட்சிகளில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான கதைகளை கூறுவார். ஆனால் அவரை தொலைக்காட்சிகளில் காண்பிக்கின்றார்கள் இல்லை. நிதி அமைச்சர் வருவார். பதில் தருவார் என்றனர்.

Leave a Reply