பெற்றோர்களை தூக்கில் போடும் கோட்டா அரசு – எதிர்க்கட்சி எம்.பி ஆவேசம்

இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

பால்மா இல்லை, உணவில்லை, டீசலில்லை, எரிபொருள் இல்லை, டொலர் இல்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை. இதற்கு பெயர் வங்குரோத்து இல்லையென்றால் வேறு என்ன.

எமது நாடு இப்படி இருக்கிறது என நாம் சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது. நாம் எதிர்க்கட்சி என்றாலும், இலங்கையர்கள். இந்த மண்ணிலே தான் சாகப்போகின்றோம்.

நாட்டை மீட்க நாமும் வருகின்றோம். உங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.- என்றார்.

Leave a Reply