பெண்குழந்தை பிறந்தமையால் சுட்டுக் கொன்ற தந்தை

பாகிஸ்தானில் இரண்டாவது குழந்தையாக பெண்குழந்தை பிறந்தமையால் ஆத்திரமடைந்த தந்தை துப்பாக்கியால் 5 தடவைகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாகாணத்தில் வசித்து வரும் தந்தையொருவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அண்மையில் அவருக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தமையால் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்த நிலையில் பிறந்து 7 நாள்களேயான பெண் குழந்தையை கொடூரமாக துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சமூகவலைத்தளத்தில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன் குறித்த தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்துக்களையும் பகிர்கின்றனர்.

Leave a Reply