ரஷ்யாவில் தனது அனைத்து சேவையையும் நிறுத்திய வார்னர் மீடியா

அmமெரிக்கா, மார்ச் 10

உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷியாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில், வார்னர்மீடியா ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் கிலர் கூறுகையில்,“

இந்தச் சூழலை நாங்கள் உன்னிப்பாகப் கவனித்து வருகிறோம், சூழலைக் கருத்தில் கொண்டு எதிர்கால வணிக முடிவுகள் எடுக்கப்படும். இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் உக்ரைன் மக்களுடன் உள்ளன. எங்கள் சேனல்களின் ஒளிபரப்பு, ரஷ்ய நிறுவனங்களுடனான அனைத்து புதிய உரிமம் மற்றும் எங்கள் நாடகம், கேம் வெளியீடுகளை நிறுத்துகிறோம்”. என்றார்

ரஷ்யாவில் ஏற்கனவே சிஎன்என் ஒளிபரப்புகளை நிறுத்தியதோடு, வார்னர்மீடியாவின் வார்னர் பிரதர்ஸ் ரஷியாவில் “தி பேட்மென்” திரைப்படத்தை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply