சீதுவ இரட்டைக் கொலை சம்பவம்; இவரை அடையாளம் கண்டால் உடனே அறிவிக்கவும்

 

2024 டிசம்பர் மாதம் சீதுவை, லியனகேமுல்ல பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2024 டிசம்பர் 28 அன்று காரில் வந்த ஒரு குழு மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்தனர்.

இது தொடர்பான சீதுவை பொலிஸாரின் விசாரணைகளில் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது வசிப்பிடப் பகுதியை விட்டு தப்பிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591637 அல்லது 011-2253522 என்ற தொலைபேசி எண்களில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *