முள்ளிமலையில் இரவோடு இரவாக விகாரை அமைக்க முயற்சி!

அம்பாறை, பாலமுனையிலுள்ள முள்ளிமலையில் பௌத்த விகாரை அமைக்க எடுக்கப்பட்ட திடீர் முயற்சிக்கு பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளனா். நேற்றுமுன்தினம் இரவோடு, இரவாக அத்திபாரம் வெட்டி விகாரை அமைக்க முற்பட்ட போது பொதுமக்களும், உள்ளூர் மட்ட அமைப்புக்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

தமிழர்கள் காலம் காலமாக வாழும் கிராமத்தில் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவொன்று அத்துமீறி விகாரைஅமைக்கும் நடவடிக்கைளை மேற்கொண்டது.
இரவு விகாரைக்கான அத்திபாரம் வெட்டப்பட்டு, நேற்றுக்காலை அடிக்கல் நடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இதனையறிந்த பிரதேச மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலர் ஊடாக அம்பாறை மாவட்டச் செயலரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

பௌத்த பிக்குகள் அடங்கிய குழு மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பிரதேச மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பை அடுத்து விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் நிறுத்தப்பட்டன. பௌத்த பிக்குகள் அடங்கிய குழு அங்கிருந்து அகன்றது.அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மையான பூமியான முள்ளிக்குளம் மலையடிவாரத்தில் முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்கின்றனர். அவர்களுக்குச் சொந்தமான காணியிலேயே பௌத்த விகாரை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் விகாரை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பிரதேச மக்கள் தெரிவித்தர்.

Leave a Reply