தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கு இடையில் எதிர்வரும் 15திகதி சந்திப்பு
பலகாலமாக சந்திப்பு தொடர்பில் பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்வரும் 15 திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நீண்ட காலப் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டுடன் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய அரசியலைப்பு விவகாரம்,பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம்,அரசியல் கைதிகள் விடுதலை,பொறுப்புக்கூறல் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேரடியாக ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





