
கடந்த வெள்ளிக்கிழமை ‘சிரச’ தொலைக்காட்சியின் ‘சட்டன’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.