இத்தாலிக்குப் பீட்சாவென்றால் இலங்கைக்கு கொத்துரொட்டி!

கொத்துரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இத்தாலியிலுள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவின் ஹாம்பர்கர்கள் போன்ற பிறநாடுகளின் பூர்வீக உணவுகளுக்கு நிகரானதாக இலங்கைக்குக் கொத்துரொட்டியை அடையாளமாக மாற்ற வேண்டும்.

கொத்துரொட்டி மட்டக்களப்பில் இருந்தே தோன்றியது. இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் – என்றார்.

Leave a Reply