
காரைநகர் – ஊர்காவற்துறை பகுதிக்கான கடல் மார்க்க பாதை சேவை இன்று இடம்பெறாத நிலையில் ,பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காரைநகர் – ஊர்காவற்துறை பகுதிக்கு பயணிக்க கூடிய ஒரே ஒரு கடல் வழிப்பாதையாக இது காணப்படுகிறது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக குறித்த பாதை சேவை இன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது,
பாதை சேவைக்கான எரிபொருள் விநியோகம் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் ஒழுங்குப்படுத்தலில் ,பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பாதை சேவை சீராக இடம்பெறும் என்று தெரிவித்துள்ளனர்





