மின்தடை ஏற்படாதென எரிசக்தி அமைச்சர் சபையில் நம்பிக்கை தெரிவிப்பு

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கி விட்டோம், மின்சார தடை இனி இருக்காது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே சபையில் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளர்.

மேலும், விரைவில் எரிபொருள் வரிசை குறையும், மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே இருப்பதாக புரளியை கிளப்பினால் மக்கள் அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடிப்பார்கள்.

60 மெற்றிக் தொன் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்சார துண்டிப்பு இல்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply