மன்னார் மக்கள் டீசல்,பெற்றோல்,மண்ணைக்காக வீதியில் காத்திருக்க, மறுபுறம் நகர சபை வீண் களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு புரம் வரிசையில் காத்திருந்தன.
மறுபுரம் கேஸ் மற்றும் மண்ணெண்னையை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று வருகின்றனர்
இவ்வாறு தொடர்சியாக பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்ற போது மன்னார் நகர சபை இவற்றை கணக்கில் கொள்ளாது வீண் களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் கொரோனா தொற்றும் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.
இதனையும் பொருட்படுத்தாமல் அதிகளவான மக்களை ஒன்று கூட்டும் விதமாக மன்னார் நகர் மத்திய பகுதியில் களியாட்ட நிகழ்வுக்கு மன்னார் நகரசபை அனுமதி வழங்கியுள்ளது
மன்னார் சைனா பயார் வளாகம் மற்றும் பேரூந்து நிலையம் முழுவதும் ஒளிபெருக்கிகளை பொருத்தி களியாட்ட நிகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில், அதன் எதிர்பகுதியில் மக்கள் பெற்றோலுக்காகவும் மண்ணெண்ணைகாகவும் வரிசையில் நிற்கும் அவலம் மன்னாரில் அரங்கேரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.









