தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமியுங்கள்! நல்லூர் தவிசாளர் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையி்ல், தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு பிரதேச மக்களிடம் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை மாலை நேரங்களில் நேரகாலத்துடன் அணைத்து உதவுங்கள்.

அதே நேரம் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழ்கள் இனங்காணப்பட்டு, துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை மீளவும் பொருத்தி கெள்வதில் மிகுந்த சிரமங்களை மக்கள் எதிர் கொள்ள வேண்டி வரும்.

ஆகவே, மின்சாரத்தை சிக்கனமாக சேமிக்குமாறு மேலும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply