
நாட்டில் சில வலையங்களில் நாளையதினம் மின்விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியால மின் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L, ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 8 மணி முதல் 6 மணிவரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்தடையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வலயங்களில் மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.





