பொன் அணிகள் மோதும் துடுப்பாட்டப் போட்டி நாளை ஆரம்பம்!

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 105வது பொன் அணிகள் போர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது .

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் 1917 ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்தது .

கொரோனர் பெரும்தொற்று காரணமாக கடந்த வருடம் இப்போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி A. P. திருமகன் , யாழ்ப்பாணக் கல்லூரி அறிபர் வணக்கத்திற்குரிய Dr D.S சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்களின் பெரும்முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டியில் சென் பற்றிகஸ் கல்லூரி 33 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன .

2020 இல் யாழ் மாவட்டத்திலே பாடசாலைகளுக்கிடையே முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட T20 முதல் கிரிக்கெட் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி பெற்றது.

இவ்வருடம் சென் பற்றிக் கல்லூரி அணிக்கு A.F. டெஸ்வினும் யாழ்ப்பாண கல்லூரிக்கு N. விஸ்னுகாந்தும் தலைமை தாங்குகின்றனர்.

இரு கல்லூரி அணிகளும் சமபலம்கொண்டவையாக காணப்படுவதினால் இக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply