இத்தாலிய சம்பியன் பட்டத்தை வென்றார் அல்கராஸ்

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு சம்பியனாக மாறினார் ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ். இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வந்தது.

நேற்றுடன் முடிவடைந்த இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6- 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

முதல் செட் ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இரு வீரர்களின் திறமையையும் மாறி மாறி வெளிப்பட்டது. ஒவ்வொ புள்ளியையும் இரு வீரர்களும் மாறி மாறி கைப்பற்றிய நிலையில் முதல் செட்டின் கடைசி தருணத்தில் 6-6 என இரு வீரர்களும் ஒரே அளவு புள்ளிகளை கைப்பற்றியிருந்த நிலையில் சிறப்பாக செயற்பட்ட அல்கரஸ் முதல் செட்டை 7-6 என தனதாக்கினார்.

3 மாத தடைக்கு பிறகு அணிக்கு திரும்பியிருந்த ஜானிக் சின்னர் சிறப்பாக செயற்பட்டு இரண்டாவது செட்டை கைப்பற்றி 1976ம் ஆண்டிற்கு பிறகு இத்தாலிய பகிரங்க தொடரை கைப்பற்றி வெகுநாள் காத்திருந்த சாதனையை முறியடிப்பார் என சூழ்ந்திருந்த ரசிகர்கள் ஆவழுடன் காத்திருந்த தருணத்தில் இரண்டாவது செட் ஆட்டம் முழூமையாக அல்கரஸின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால் ரசிகர்கள் கவலையடைந்தார்கள்.

5-0 என இரண்டாவது செட்டை ஆதிக்கம் செலுத்தினார் அல்கராஸ் பின்னர் ஆறுதலாக ஒரு புள்ளியை சின்னர் பெற்றிருந்த நிலையில் தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்ட அல்கராஸ் 6-1 என இரண்டாவது செட்டை இலகுவாக கைப்பற்றி 7-6 – 6-1 என நேர் செட் கணக்கில் கைப்பற்றி இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரை கைப்பற்றி அசத்தினார் அல்கராஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *