பதவிகளைத் துறந்துவிட்டு போராடத் தயார்! – தயாசிறி அதிரடி அறிவிப்பு

நாட்டை மீட்டெடுக்க எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார். தேவையான நேரத்தில் பதவிகளைத் துறந்துவிட்டு, மக்களோடு மக்களாக வீதியில் இறங்கிப் போராடுவோம்.

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசில் நாம் அங்கம் வகித்தாலும் பங்காளிக் கட்சிகளுடனான எமது அரசியல் நடவடிக்கை தொடரும். நாம் எவரையும் கைவிடவில்லை.

தேவையான நேரத்தில் பதவிகளைத் துறந்துவிட்டு போராடத் தயார். எவரினதும் வாலாக இருக்க நாம் விரும்பவில்லை. எதிர்காலத்தில் பலமான கூட்டணி அமைக்கப்படும் – என்றார்.

Leave a Reply