
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் கடந்த மூன்று மாதங்களாக உணவும் அத்தியாவசியப் பொருட்களுமின்றிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து காஸாவினுள் நிவாரண உதவிகள் நுழைவதற்கு இஸ்ரேல் தடைவிதித்திருக்கிறது.

