
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மேலும் சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பொன்றினை உருவாக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர். இந்த முஸ்லிம் கூட்டமைப்பின் வெள்ளோட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியினை கைப்பற்றுவதற்காக சில சபைகளில் இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

