
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். புத்திஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு விரிவான பரிந்துரைகளை கூட்டாக சமர்ப்பித்துள்ளது.

