வெளிநாட்டிலுள்ள தமிழர்களை நாட்டுக்கு வரவழைத்து கைது செய்வது நியாயமா? மனோ எம்.பி கேள்வி

 

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து பிணையில் விடுவிக்காமல் தடுத்து வைக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த நாட்டில் ஊழல் செய்தவர்களை சிறையில் அடைக்குமாறு கூறிய அவர், 400க்கும் அதிகமான ஊழல் கோப்புகள் இருப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

சட்டத்தில் இடமிருந்தால் ஊழல்வாதிகளுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

வெளிநாட்டிலுள்ள தமிழர்களை நாட்டுக்கு வரவழைத்து அவர்களைக் கைது செய்வது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply