புதிய நிபந்தனைகளுடன் ஜூனில் உலக டெஸ்ட் சாம்பியன்; சர்வதேச கிரிக்கெட் பேரவை..!

கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதிய விளையாட்டு நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒற்றை பந்து முறைமைக்குத் திரும்புவதும் புதிய நிபந்தனைகளில் அடங்கவுள்ளது. 

இதன்படி, ஜூன் மாதம் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஜூலை மாதம் முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலும் புதிய நிபந்தனைகள்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

 

எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ண போட்டியுடன் புதிய நிபந்தனைகள்  நடைமுறைக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply