
கொழும்பு, மார்ச் 11
நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்தள்ளதன் காரணத்தால் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




