45 மில்லியன் ரூபா மதிப்புள்ள இருதய மருந்துகள் ஏற்றுமதி..!

ரூ.45 மில்லியன் மதிப்புள்ள இருதய மருந்துகள்  முதலாவதாக பெருவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 

 

இதனை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, செலோஜென் லங்காவின் தலைவரைச் சந்தித்து உறுதிப்படுத்தினார். 

உள்ளூர் மருந்துகளுக்கான அரசாங்கத்தின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன்  அனைவருக்கும் நியாயமான விலை நிர்ணயம் மற்றும் தரத்தையும் வலியுறுத்தினார்.

மருந்துகள் ஏற்றுமதியில் இலங்கை ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் மருந்துகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் ஆதரவு வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டதிருந்தது. 

இந்த நிலையில் தற்போது உள்ளூர் மருந்து ஏற்றுமதிக்கு ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply