நகைக்கடைக்குள் புகுந்து ,கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் பிரதான வீதியிலுள்ள நான்கு கடைகள் இன்று  (02) அதிகாலை இனந்தெரியாத திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மூன்று நகைக்கடைகளும்,ஒரு பான்சிக் கடையும் உடைக்கப்பட்டுள்ளது.

இத்திருட்டில் நகைக்கடைகளிலிருந்து வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதோடு பான்சிக் கடையிலிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 

மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply