நாட்டில் இன்று முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம்

நாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு நாணயக் கடிதங்களை வழங்குவதனை கடந்த வாரம் வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தியதை அடுத்து எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நிலை தோன்றியிருந்தது.

இதன்காரணமாக நீண்டவரிசையில் காத்திருந்து எரிவாயுவினை மக்கள் பெற்றுகொள்ளும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதேபோன்று எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதிகளவான உணவகங்கள் மூடப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply